வணக்கம் நண்பர்களே

Friday, February 24, 2012
Wednesday, January 11, 2012
ஃபேஸ்புக்கில் தவிர்க்க வேண்டிய 7 முக்கியமான தவறுகள்
ஃபேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக பயன்படுத்த, தவிர்க்க வேண்டிய
1. சுலபமான ஒரு கடவுச்சொல்லை பயன்படுத்துவது (Using a Weak Password)
பெயர்கள், களஞ்சியத்தில் உள்ள சில சுலபமான வார்த்தைகள், அவ ற்றுக்கிடையில் எண்களை சேர்த்து பயன்படுத்துவது போன்றவற்றை உங்கள் கடவுச்சொல்லாக பயன்படுத்துவதை தவிர்த்தல் அவசிய ம்! அதற்க்கு பதிலாக, பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களுடன் (upper- and lower-case letters) எண்கள் மற்றும் குறியீடுகளை (symbols) கடவுச்சொல்லாக பயன்படுத்துவது மிகவும் உறுதியா னது! ஒரு கடவுச்சொல் குறைந்தது 8 எழுத்துக்களைக் கொண்டிரு த்தல் நலம். மற்றுமொரு வழி, ஒரு வார்த்தையின் நடுவில் எண் கள்/குறியீடுகளை சேர்த்து கடவுச்சொல்லாக பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. உதாரணமாக, “houses” என்னும் வார்த்தையை hO27usEs என்று மாற்றிப் பயன்படுத்துவது!
வர்மக்கலை – தற்காப்புக் கலை
வர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்
லது புள்ளிகளை பற்றிய அறிவைமைய மாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும். வர்மக் கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ் ஞானத்தை அடிப்படையாக வைத்து தொட ங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக் கலை யாக வளர்த்தெடுக்கப்பட்டது. .
வர்மம் என்றால் என்ன?
உடலின் குறிப்பிட்ட சில நரம்புகளில், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அள வில் தட்டுப்பட்டால் ஒருவர் உணர்விழப்பர். அந்தக் குறிப்பிட்ட இடங்களே ”வர்மம்” எனப்படும். உடல் சீராக இயங்குவதற்காக உடலின் 108 இடங் களில் நின்று இயங்கும் உயிர் நிலைகளே வர்மங்கள் எனப்படும். அதாவது ”உயிர் நிலைகளின் ஓட்டம்” எனக் கூறுவர்.
Tuesday, January 10, 2012
வெற்றி பெற சில வழிகள்
சூழ்நிலைக்கேற்றபடி நம்பைப் பொருத்திக் கொள்ள வேண்டும்- நம் திறமைமேல் நமக்கே நம்பிக்கை வேண்டும்.
- வித்தியாசமாகச் செய்தால் வெற்றி நிச்சயம்உழைப்பும் திறமையும் ஒரு சதவீதம் கடவுளின் அருள் 99 சதவீதம்
- அகாடமிக் ப்ரில்லியன்ஸ் 30% என்றால், பொது அறிவும், சாமர்த்தியமும் 70% இருந்தால் வெற்றி பெறலாம்.
- எந்தக் கருத்தாயிருந்தாலும் அதை வெளிப்படுத்தும் விதம் (பிரசன்டேஷன்) சரியாக இருக்க வேண்டும்.
- எதிலும் பாசிடிவ் ஆக இருக்கும்போதே மோசமான விளைவுகளுக்கும் தயாராகியிருக்க வேண்டும். அப்படி இருந்தால், எதிர்பார்ப்பினால் ஏற்படும் ஏமாற்றம் நம்மை பாதிக்காது
- DAMN sathees
பத்தே நிமிடத்தில் பயோடேட்டா உருவாக்குவது எப்படி ?
என்ன தான் பெரிய படிப்பு படித்தாலும் தமக்கென்று ஒரு பயோ
டேட்டா உருவாக்க வே ண்டும் என்றால் பல பேரின் பயோடேட்டாக் களை பார்த்து அதில் எது சிறந்ததாக இருக்கிற தோ அதன்படி தான் பல பேர் பயோடேட்டா உரு வாக்குகின்றனர் ஆனால் மேலதிகாரி களை ஈர்க்கும்படி நமக்கு பயோடேட்டாவை 10 நிமிடத்தில் ஒரு தளம் உருவாக்கி கொடுக்
கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
பலமணி நேரம் செலவு செய் தாலும் சரியாக பயோடேட்டா அமைய மாட்டேன் என்கிறதே என்று சொல்லும் நம்மவர்கள் கூட இனி தன் திறமையை எங்கு எந்த இடத்தில் காட்டினால் மே லதிகாரிகளை கவரலாம் என்று சொல்லி நமக்கு பயோடேட்டா உருவாக்கி கொடுக்கிறது ஒரு தளம்http://www.resumesimo.com.
இத்தளத்திற்கு சென்று முகப்பில் இருக்கும் Get Started என்ற பொத்தானை சொடுக்கி நாம் பயோடேட்டா உருவாக்க ஆரம்பிக்க லாம். நம் பெயர், முகவரி, கல்வித்தகுதி, இதரதகுதிகள் என ஒவ் வொன்றாக கேட்டு வேலை செய்ய விரும்பும் துறைகள் வரை அனைத்தையும் கேட்ட பின் நம் பயோடேட்டாவை எப்படி கொடுத் தால் சிறப்பாக இருக்குமோ அப்படி கொடுக்கிறது.பல்வேறு வகை யான பயோடேட்டாவின் மாடல்கள் இங்கு இருக்கிறது இதில் எது வேண்டுமோ அதை நாம் ஒரே சொடுக்கில் தேர்ந்த்தெடுத்துக் கொள் ள்லாம். எதையெல்லாம் மேலதிகாரிகளின் பார்வையில் படும்படி வைக்க வேண்டும் என்று அழகாக வகைப்படுத்தி கண்ணால் பார்ப தற்கு அழகாகவும் சிறப்பாகவும் பயோடேட்டா உருவாக்கி கொடுக் கிறது. எந்தவிதமான கட்டணமும் இல்லை எங்கு வேண்டுமானா லும் எப்போது வேண்டுமானாலும் இணையம் வழியாக அனை வரும் பார்க்கும் வண்ணமும் தேவைப்படும்போது
பிரிண்ட் செய்துகொள்ளும் வசதியும் இருக்கிறது. பத்தே நிமிடத்தில் பயோடேட்டா உருவாக்கி நம் வாழ்க்கையில் புது திருப்பத்தை உரு வாக்கும் இந்தப்பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
DAMN sathees
தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …
(சிரிக்க மட்டுமே)

see more click here






இதோ …..மிக சிறந்த வழி..
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
கல்யாணம் பண்ணிக்கோ …..
DAMN sathees
Thursday, December 22, 2011
விஜய் நடிக்கும் நண்பன் படத்தின் வெளிவராத சுவாரஸ்யங்கள்!
3-இடியட்ஸ் என்ற இந்தி படத்தை உரிமையை
வாங்கி ஷங்கர் தன்னுடைய பாணியில் இயக்கி
டித்திருக்கும் படம்தான் “நண்பன்“.
ராகவாலாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, சத்யன் என
மிகப்பபெரிய நடிகர் பட்டாளத்துடன்
தயாராகியிருக்கிறது இத்திரைப்படம்.
காதாயாநாயகியாக இலியானா நடித்திருக்கிறார்.
இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது
வெளியிடப்பட்டுள்ளது. மேலும் நாளை 23-ந் தேதி
நண்பன் படத்தில் பாடல்கள்
வெளியிடப்படயிருக்கிறது.
இந்தபடத்தின் பாடல்களை பிரமாண்டமாக வெளியிட ஏற்பாடுகள் நடந்துக் கொண்டு இருக்கிறது. இந்த
பாடல் வெளியிட்டுவிழாவுக்கு ரசிகர்களை விஜய் அழைத்திருக்கிறார்.
பொங்கலுக்கு வெளிவர இருக்கும் இந்த நண்பன் படத்தின் சுவாரஸ்யங்கள் இங்கே.
முதலில் இந்த படத்துக்கு வைக்கவிருந்த பெயர் “மூவர்”இதை தவிர்த்து கடைசியாக “நண்பன்” என்று
பெயர் சூ்ட்டினார்.
நண்பன் என்ற படத்தலைப்பு ரஜினியின் “பாண்டியன்” படத்துக்கு வைத்து பிறகு மாற்றிவிட்டார்கள். இது
கூடுதல் தகவல்.
நண்பன் படத்தில் ஸ்ரீகாந்துக்கு கல்லூரி மாணவர் வேடம், அதற்காக கல்லூரி மாணவர் அளவுக்கு
உடலை குறைக்க ஷங்கர் விரும்பியிருக்கிறார்.
அதை பூர்த்திசெய்ய ஒரு வேளை உணவை தவிர்த்து ஒரு கல்லூரி மாணவரின் உடல்வாகை
பெற்றுவிட்டார் ஸ்ரீகாந்த்.
நடிப்பில் நான் தனியாக தெரிய வேண்டும் என்பது ஸ்ரீகாந்தின் ஆசையாம்.
இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா இந்தப் படத்தில் மிக முக்கியமான ஒரு பாத்திரத்தில்
நடித்துக்கொடுத்திருக்கிறாராம்.
சன் குழுமம் பல்வேறு வழக்குகளை சந்தித்து தற்போது அதிலிருந்து கொஞ்சம் வெளியில்
வந்திருக்கிறது. சக்சேனா சிறைவாசத்திற்கு பிறகு புதிய சி.இ.ஓ-வாக செம்பியன்என்பவர்
நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பிரபல தயாரிப்பாளர் கோவை செழியனின் மகன்.
இதுவரையில் விஜய்யிடம் சுனக்கம் காட்டிவந்த சன் மூவீஸ்தற்போது இழந்த இடத்தை மீண்டும் பிடிக்க
திட்டமிட்டுள்ளதால். விஜயின் படம் அதற்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறது.
ஷங்கர் இயக்கிய எந்திரன் சன் பிக்சர் படம் என்பதால் ஷங்கர் இதற்கு ஒத்துழைப்பு கொடுப்பார் என்று
கருதப்படுகிறது. பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

தமிழிலும் தெலுங்கிலும், நடிப்பு, இயக்கம், என
பிஸியாக இருக்கும் லாரன்ஸிடம் ஷங்கர் நண்பன்
படித்தில் நடிக்க கேட்டபோது மறுப்பேதும்
சொல்லாமல் ஒத்துக்கொண்டு
நடித்துகொடுத்துள்ளார். லாரன்ஸ்.
படம் நல்லபடியாக முடிந்ததை அடுத்து, அதில்
பணிப்புரிந்த250க்கும் மேற்பட்ட
படக்குழுவினர்களுக்கு வடபழனியில் உள்ள
பெரிய நட்சத்திர ஹோட்டலில் பெரிய
விருந்துகொடுத்து அசத்தியிருக்கிறார் விஜய்.
தீபாவளிக்கு வெளியிடவேண்டும் என்று ஆரம்பித்த நண்பன் தள்ளிப்போய் பொங்கலுக்கு வருவது
உறுதியாகிவிட்டது.
ஷங்கர் அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.பொங்களுக்கு விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில்
மிதப்பார்கள்.
எந்திரன் என்ற மிகபிரமாண்டத்திற்கு பிறகு ஷங்கரும், காவலன், வேலாயுதம் வெற்றிக்குபிறகு
விஜய்யும், இணைந்துகொடுக்கும் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
இதில் நடித்திருக்கும் அனைவரையும் ஷங்கர் முதல் முறையாக இயக்குகிறார். ஆகையால்
அனைவரும் ஆர்வமுடன் நடித்து கொடுத்திருக்கிறார்களாலாம்.
எதிர்காலத்தில் நண்பன் படம் இருவருக்கும் ஒரு எழுச்சியாக இருக்குமா?… அல்லது வீழ்ச்சியாக
இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருதரப்பிலும் வலுத்துள்ளது.
நண்பன் படத்தின் வெற்றி எவ்வாறு உள்ளது என்பதை பார்க்க பொங்கல் வரை காத்திருப்போம்..
Monday, December 19, 2011
கல்பனா சாவ்லா
2003 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி கொலம்பியா வான்கலம் விண்ணில் சிதைந்தது. இந்திய சமூகமும் ஒட்டுமொத்த விண்வெளி சமூகமும் சோகத்தில் மூழ்கியது. 41 வயதில் வானத்தில் ஒரு நட்சத்திரமாகிப்போன இந்தியாவின் முதல் வீராங்கனை கல்பனா சாவ்லாவைப் பற்றிதான் தெரிந்துகொள்ள இருக்கிறோம்.
1961 ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதி இந்தியாவின் ஹரியானா மாநிலத்திலுள்ள கர்னால் என்ற சிறிய நகரத்தில் பிறந்தார் கல்பனா சாவ்லா. நான்கு பிள்ளைகளில் அவர்தான் கடைக்குட்டி. தந்தை ஓர் வர்த்தகர், தாய் இல்லத்தரசி. மற்ற பெண் குழந்தைகளைப்போல் பொம்மைகளை வைத்து விளையாடுவதற்கு பதில் கல்பனா விமானங்களை வரைந்தும் ஓவியம் தீட்டிக்கொண்டும் இருப்பார். சிறு வயதிலேயிருந்தே விண்வெளி பொறியாளராக வரவேண்டும் என்பதுதான் கல்பனாவின் விருப்பமாக இருந்தது.
1961 ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதி இந்தியாவின் ஹரியானா மாநிலத்திலுள்ள கர்னால் என்ற சிறிய நகரத்தில் பிறந்தார் கல்பனா சாவ்லா. நான்கு பிள்ளைகளில் அவர்தான் கடைக்குட்டி. தந்தை ஓர் வர்த்தகர், தாய் இல்லத்தரசி. மற்ற பெண் குழந்தைகளைப்போல் பொம்மைகளை வைத்து விளையாடுவதற்கு பதில் கல்பனா விமானங்களை வரைந்தும் ஓவியம் தீட்டிக்கொண்டும் இருப்பார். சிறு வயதிலேயிருந்தே விண்வெளி பொறியாளராக வரவேண்டும் என்பதுதான் கல்பனாவின் விருப்பமாக இருந்தது.
கல்பனா தன் கிராமத்து தெருக்களில் நின்றுகொண்டு ஆகாயத்தை பார்த்து வியப்பார். ஆகாயத்தில் அமைதியை கிழித்துக்கொண்டு போகும் விமானங்களின் பாதையை இமைகொட்டாமல் பார்த்துகொண்டு இருப்பார். தன் சகோதரனின் மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் போதெல்லாம் அவரது பார்வை ஆகாயத்தை நோக்கிதான் உயரும். கர்னாவில் உள்ள தாஹூர் பள்ளியில் ஆரம்ப கல்வியை முடித்த கல்பனா சண்டிகாரில் பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான பொறியியல் பயில விரும்பினார். அந்த துறையில் பயின்ற மற்ற அனைவரும் ஆண்களாக இருந்ததால் முதலில் பெற்றோர்கள் மறுத்தனர்.
ஆனால் கல்பனாவின் எண்ணத்தை அவர்களால் மாற்ற முடியவில்லை. அந்த கல்லூரியில் 1982 ல் இளங்கலை பட்டம் பெற்றார். ஆகாயத்தைப் பற்றியே கனவு கண்டு கொண்டிருந்த அவரை அமெரிக்கா வரவேற்றது. 1984 ஆம் ஆண்டு டெக்ஸஸ் பல்கலைகழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். நான்கு ஆண்டுகள் கழித்து கொலோராடோ பல்கலை கழகத்தில் அதே பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். முனைவர் பட்டம் பெற்ற உடனேயே நாசா எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையத்தில் சேர்ந்தார். எளிய மொழியில் விளக்குவதற்கு சிரமமான சில ஆராய்ட்சிகளில் ஈடுபட்டார்.
1993 ல் கல்பனா ஒரு தனியார் நிறுவனத்தில் ஆய்வு விஞ்ஞானியாக சேர்ந்தார். அதற்கு அடுத்த ஆண்டே கல்பனாவின் விண்வெளி கனவு நனவாக தொடங்கியது. விண்வெளி வீரர், வீராங்கனை பயிற்சி பெற விண்ணப்பத்திருந்த சுமார் மூவாயிரம் நபர்களிலிருந்து ஆறு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுள் ஒருவர் கல்பனா. ஜான்ஸன் விண்வெளி தளத்தில் பல்வேறு உடல் மருத்துவ பரிசோதனைகள், கடுமையான நேர்கானல்கள் ஆகியவற்றை கடந்து வெற்றிகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டார் கல்பனா.
1995 ல் பயிற்சி முடிந்து வின்வெளி வீராங்கனையாக தகுதி பெற்றார். அவரது முதல் வின்வெளி பயணம் 1997 ஆம் ஆண்டு நவம்பர் 19 ந்தேதி தொடங்கியது. ஆறு வீரர்களுடன் ப்ளோரிடாவில் கேப் கெனவரல் முனையிலிருந்து விண்ணுக்கு செலுத்தபட்டது கொலம்பியா வான்கலம். அந்த வான்கலத்தின் இயந்திர கரங்களை இயக்கும் முக்கிய பொறுப்பு கல்பனாவுக்கு தரப்பட்டது. 16 நாட்கள் விண்வெளியில் வானத்தையும் நட்சத்திரங்களையும் நலம் விசாரித்த கல்பனா 252 தடவை பூமியை சுற்றியதோடு சுமார் ஆறரை மில்லியன் மைல் தொலைவு பயணம் செய்தார். டிசம்பர் ஐந்தாம் நாள் ஆறு விண்வெளி வீரர்களும் வெற்றியோடு பூமிக்கு திரும்பினர். அன்றைய தினம் விண்வெளிக்கு சென்று வந்த முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றார் கல்பனா.
முதல் வின்வெளி பயணத்தை முடித்த ஐந்து ஆண்டுகளில் மீண்டும் விண்ணுக்கு செல்ல கல்பனாவுக்கு அழைப்பு வந்தது. முதல் பயணத்தில் அவர்களை பத்திரமாக தரையிறக்கிய அதே கொலம்பியா வான்கலத்தில் 2003 ஆம் ஆண்டு சனவரி 16 ந்தேதி கல்பனா உட்பட ஏழு வீரர்கள் விண்ணுக்கு பாய்ச்சப்பட்டனர். பிப்ரவரி முதல் தேதிவரை அந்த பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. சுமார் 80 அறிவியல் ஆராய்ட்சிகளை அவர்கள் நடத்தினர். அந்த பதினாறு நாள் பயணத்தை முடித்துகொண்டு வெற்றிக்கரமாக தரையிறங்க பதினாறு நிமிடங்கள் இருந்தபோது கொலம்பியா வான்கலம் விண்ணில் வெடித்து சிதறியது. கல்பனா என்ற நம்பிக்கை பூ 41 வயதில் உதிர்ந்தது.
கொலம்பியா விண்வெளி பயணம் மேற்கொள்ளும் முன் அவரிடம் நடத்தப்பட்ட பேட்டியில் உங்களுக்கு ஊக்கமூட்டியவர்கள் அல்லது ஊக்கமூட்டிகொண்டிருப்பவர்கள் யார் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு கல்பனா இவ்வாறு கூறினார்:
முழுமனதோடு ஒரு காரியத்தில் ஈடுபடும் எவரை பார்த்தாலும் எனக்கு ஊக்கம் ஏற்படும். உதாரணத்திற்கு எனது உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பணியை அவர்கள் முழுமனதோடு செய்த விதம் கற்பிப்பதில் எங்களோடு அதிக நேரத்தை செலவிட்ட விதம், அவர்களின் பொறுமையைப் பற்றி இப்போது நினைத்து பார்த்தாலும் வியப்பாக உள்ளது. இதைத்தவிர மேலும் கண்டுபிடிப்பாளர்களின் கதைகளும் எனக்கு ஊக்கம் தரும்.
கல்பனாவின் விண்வெளி வெற்றியால் இன்று பலர் விண்வெளி கனவுகளை சுமந்துகொண்டு இருக்கின்றனர் இதுதான் கல்பனா இந்த உலகத்திற்கு விட்டு சென்ற சொத்து. அடக்கம் செய்யக்கூட அவரது உடல் கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால் அவரது ஆத்மா அவருக்கு விருப்பமான அந்த விண்வெளியில்தான் உலா வந்து கொண்டிருக்க வேண்டும். ஒரு சாதாரன பள்ளியில் படித்தும் பலர் வியக்கும்படி தன் கனவுகளை வாழ்ந்து காட்டினார் கல்பனா. இன்றைய மாணவர்களும் சிறந்த கல்வியோடு தன் கனவுகளை நோக்கி பயணித்தால் கல்பனாவைப் போன்று சாதிக்க முடியாதா?
வானத்தை கனவு கண்ட கல்பனா சாவ்லா அந்த வானத்தையே வசமாக்கிக்கொண்டதில் ஆச்சரியமில்லை. நாம் எல்லோரையும் விட வானத்திற்கு அருகில் சென்றுவிட்டு வந்தவர் கல்பனா. கனவோடு கலந்த உழைப்பும் முழுமனதோடு காரியத்தில் ஈடுபடும் பண்பும்தான் கல்பனாவை விண்ணுக்கு கொண்டு சென்றது. அவர் பிறந்த நமது இந்திய மண்ணுக்கு பெருமை சேர்த்தது. கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் விதமாக நியூயார்க் நகரிலுள்ள ஒரு வீதிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. Damn satheesபுரூஸ் லீ - தற்காப்புக்கலையின் முடிசூடா மன்னன்
நாம் விரும்பும் இலக்கை அடைவதற்கு உடல் வலிமையை விட மனவலிமைதான் முக்கியம் என்று வாழ்ந்துகாட்டிய வரலாற்று மாந்தர்கள் பலர். உலகத்தின் உதாசீன பேச்சுக்களையும் ஏளன சிரிப்புகளையும், கேலி கிண்டல்களையும் தாண்டி ஒருவன் சாதனை படைக்க வேண்டுமென்றால் அதற்கு உடல் வலிமை மட்டும் போதாது. இரும்பு போன்ற மன வலிமையும் வேண்டும். நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் வரலாற்று நாயகருக்கு அப்படிப்பட்ட மன வலிமை இருந்தது இல்லையென்றால் பிறந்தபோதே ஆரோக்கியமின்றி ஒழுங்காக பள்ளிக்குக்கூட செல்லாமல் குண்டர் கும்பல்களில் சேர்ந்து எங்கெல்லாம் சண்டை நடக்குமோ அங்கெல்லாம் சண்டையில் ஈடுபட்ட ஓர் இளைஞனுக்கு தற்காப்பு கலையில் சாதனை செய்ய வேண்டும் என்ற கனவும், ஒரு சிறந்த நடிகனாக வரவேண்டும் என்ற ஆசையும் உதித்திருக்காது. பல இன்னல்களை கடந்து தனது கனவுகளை நனவாக்கவும் முடிந்திருக்காது.
1959 ஆம் ஆண்டு சராசரிக்கும் குறைவான உயரத்தோடும், ஒல்லியான தேகத்தோடும் அமெரிக்க மண்ணில் வந்திறங்கினான் அந்த 18 வயது இளைஞன். அப்போது ஜான் வேய்ங், ஜேம்ஸ் டீன், சார்ல்ஸ் அட்லஸ் போன்ற நடிகர்கள் புகழின் உச்சியில் இருந்தனர். ஆனால் பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்த அந்த இளைஞன் என்ன சொன்னான் தெரியுமா? அந்த ஆக்ஷன் கதாநாயகர்களுக்கெல்லாம் இனி நாந்தான் மாற்று என துணிந்து சொன்னான். அப்போது அமெரிக்கர்கள் மட்டுமல்ல அந்த இளைஞனின் சமூகம்கூட அவனை ஏளனமாக பார்த்தது. ஆனால் ஏளனங்களை ஏணிப்படிகளாக்கி அடுத்த 14 ஆண்டுகளில் வெற்றிக்கொடி நாட்டி சினிமா என்ற வாகனத்தின்மூலம் தற்காப்புக்கலைக்கு உலகலாவிய அங்கீகாரம் பெற்றுத்தந்தார் அந்த தற்காப்புக்கலை வல்லுநர் திரைப்பட நடிகர். அவரது பெயர் புரூஸ் லீ.
1940 ஆம் ஆண்டு நவம்பர் 27 ந்தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாநிலத்தில் பிறந்தார் புரூஸ் லீ. பிறந்தபோது அவருக்கு இடப்பட்ட பெயர் லீ ஜுன்பேன்' அவரது தந்தை லீ கோய்ன் ஒரு சீனர், தாயார் கிரேஸ் ஐரோப்பியர். சிறுவயதில் ஹாங்காங்கில் வாழ்ந்தது புரூஸ் லீயின் குடும்பம். அங்கே பெரும்பாலான சிறுவர்கள் தெருக்களில்தான் பொழுதைக் கழிப்பார்கள். அப்படி நிறைய நேரத்தைக் கழித்த புரூஸ் லீக்கு சண்டை போடுவதில் இருந்த ஆர்வம் படிப்பில் இல்லை. மேலும் சுமார் 20 சீனப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றும் வாய்ப்பு புரூஸ் லீக்கு கிடைத்தது. சண்டையையும் சினிமாவையும் எடுத்துக்கொண்டு பள்ளியையும் பாடங்களையும் ஒதுக்கினார் புரூஸ் லீ.
இயற்கையாகவே நன்றாக சண்டைபோடும் திறமை அவருக்கு இருந்ததால் ஒரு கும்பலுக்கு தலைவனாகவும் இருந்தார். புரூஸ் லீயின் தந்தையோ நன்கு படித்து தொழில்துறையில் ஈடுபட வேண்டும் என விரும்பினார் ஆனால் சண்டைபோட்டு எல்லோரையும் வெற்றிக்கொள்ள வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார் புரூஸ் லீ. சிலமுறை பெரிய குண்டர்களிடம் மோதி தோல்வியும் கண்டிருக்கிறார். அப்போதுதான் ஒரு நல்ல தற்காப்புக்கலையை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு எழுந்தது. தன் தந்தையிடமே குங்பூ என்ற பாரம்பரிய சீன தற்காப்புக்கலையைக் கற்றுக்கொண்டார். அடிக்கடி அடிதடிகளில் ஈடுபட்டதால் புரூஸ் லீயின் கொட்டத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத பெற்றோர் அவரிடம் 100 டாலரைக் கொடுத்து அமெரிக்காவில் போய் எப்படியாவது பிழைத்துக்கொள் என்று கப்பலேற்றிவிட்டனர்.
அப்போதுதான் 18 வயது இளைஞனாக அமெரிக்கா வந்து சேர்ந்தார் புரூஸ் லீ. சியாட்டலில் இருந்த ஒரு நண்பரின் சீன உணவக விடுதியில் தங்கிக்கொண்டு தற்காப்புக் கலையை கற்றுக்கொடுக்க தொடங்கினார். அந்த விடுதியில் வேலையும் பார்த்தார். அவரது எண்ணம், செயல் எல்லாம் குங்பூ என்ற தற்காப்புக்கலையைப் பற்றியே இருந்தது. மேற்கத்திய மல்யுத்தம், ஜீடோ, கராத்தே, குத்துச்சண்டை ஆகியவற்றையும் கற்றுக்கொண்டு சில புதியபாணி அசைவுகளையும் சேர்த்து அவர் சொந்தமாக ஒரு தற்காப்புக்கலையை உருவாக்கினார். அதற்கு ஜீட்குன்டோ என்று பெயரிட்டார். அவரிடம் தற்காப்புக்கலையை கற்றுக்கொள்ள வந்த லிண்டா என்ற பெண்ணை மணந்து கொண்டார் புரூஸ் லீ. 20 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த புரூஸ் லீக்கு ஹாலிவுட்டில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. ஆனால் ஹாலிவுட் அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சோர்ந்துபோன புரூஸ் லீ ஹாங்காங் திரும்பினார்.
தி பிக் பாஸ், ஸ்பிட் ஆஃப் பியூரி என்ற இரண்டு படங்களில் புரூஸ் லீ நடித்தார் அதில் அவர் பம்பரம்போல் சுழன்று சுழன்று காட்டிய வித்தைகளும், சாகசங்களும் ஆசிய சினிமா பிரியர்களை அசத்தின. ஆனால் ஆசியாவை அசத்திய அந்தப்படங்கள் ஹாலிவுட்டின் கடைக்கண் பார்வையைக்கூட பெறத்தவறின. அதைப்பற்றி கவலைப்படாத புரூஸ் லீ 1972 ஆம் ஆண்டில் “தி ரிட்டன் ஆப் த டிராகன்” என்ற படத்தை சொந்தமாக தயாரித்தார். சினிமாவின் மந்திரங்களை ஓரளவுக்கு புரிந்துகொண்டிருந்த புரூஸ் லீ திரைக்கதையைத் தானே எழுதி திரைப்படத்தை இயக்கவும் செய்தார். பொதுவாக சண்டைக்காட்சிகளில் ஸ்டண்ட் நடிகர்களை வைத்துதான் படம் எடுப்பது வழக்கம் ஆனால் புரூஸ் லீயோ கேமரா வித்தைகள் இல்லாமல் அதிவேகமாக அதேநேரத்தில் தத்ரூபமாக சண்டைப் போடக்கூடிய திறமைசாலி என்பதை அந்தப்படம் அமெரிக்கர்களுக்கு உணர்த்தியது.
அதுவரை ஆசிய இளையர்கள் மட்டும் புரூஸ் லீயின் விசிறிகளாக இருந்தனர். “தி ரிட்டன் ஆஃப் த டிராகன்” படத்திற்கு பிறகு அமெரிக்க இளையர்களும் புரூஸ் லீயின் வெறித்தனமான விசிறிகளாயினர். அந்தப்படம் தந்த வெற்றிக்களிப்பில் “கேம் ஆப் டெத்” என்ற தனது அடுத்தப்படத்துக்கான வேலையை ஆரம்பித்தார் புரூஸ் லீ. அவரது பிரபலத்தையும் வசீகரத்தையும் உணர்ந்துகொண்ட ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் ஓடோடி வந்து தங்களுக்காக படம் எடுக்க வேண்டுமாறு புரூஸ் லீயைக் கேட்டுக்கொண்டனர். ஹாலிவுட்டில் நடிக்க வேண்டுமென்பதை தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டவராயிற்றே அவர். உடனே தனது சொந்த படத்தை தள்ளிப்போட்டுவிட்டு ஹாலிவுட்டுக்காக “என்டர் தி டிராகன்” என்ற படத்தை எடுக்கத் தொடங்கினார். அசுர வேகத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு, ரீ ரெக்கார்டிங், எடிட்டிங் வேலைகள் அனைத்தும் இரண்டே மாதங்களில் முடிவடைந்தன.
“என்டர் தி டிராகன்” என்ற படம் திரைக்கு வர மூன்றே வாரங்கள் இருந்தபோது எதிர்பாரத ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தது. 1973 ஆம் ஆண்டு ஜீலை 20 ந்தேதி தன் மனைவி லிண்டாவிடம் விடைபெற்றுக்கொண்டு முடிக்கப்படாமல் இருந்த தனது சொந்தப்படமான “கேம் ஆப் டெத்” என்ற திரைப்படத்தைப்பற்றி விவாதிக்க வெளியில் சென்றார் புரூஸ் லீ. அன்று இரவே மர்மமான முறையில் இறந்துபோனார் புரூஸ் லீ. அப்போது அவருக்கு வயது 33 தான். அவர் இறந்தது பெடிட் டிங் பே என்ற ஒரு நடிகையின் வீட்டில் அதனால் புருஸ் லீயின் மரணம் குறித்து பல வதந்திகள் எழுந்தன. ஒருமுறை படப்பிடிப்பில் ஏற்பட்ட சண்டைக்காட்சியின் போது தலையில் விழுந்த அடியால் மூளை வீங்கி இறந்துபோனார் என்று மருத்துவர்கள் கூறினர். உண்மையைக் கண்டுபிடிக்க ஹாங்காங் அரசாங்கம் ஒரு விசாரணைக் குழுவை நியமித்தது. ஆனால் இன்றுவரை புரூஸ் லீ இறந்ததற்கான உண்மையான காரணம் தெரியவிலை.
புரூஸ் லீயின் மரணத்திற்கு பிறகு வெளிவந்த “என்டர் தி டிராகன்” படம் சக்கைப்போடு போட்டு 200 மில்லியன் டாலர் வசூலை அள்ளிக்குவித்தது. உலகெங்கும் பல இளையர்கள் கராத்தே பைத்தியமானார்கள். மூளை முடுக்குகளிலெல்லாம் கராத்தே பள்ளிகள் தொடங்கப்பட்டன. இவ்வாறு உலக இளையர்களின் கவணத்தை தனி ஒரு மனிதனாக தற்காப்புக்கலைப்பக்கம் திருப்பிய பெருமை புரூஸ் லீயையே சேரும். வரலாற்றின் எந்த கால கட்டத்தையும்விட எழுபதுகளில்தான் மிக அதிகமான இளையர்கள் தற்காப்புக்கலை பள்ளிகளில் சேர்ந்து பயின்றனர் என்ற உண்மையே அதற்கு சான்று. தன் கனவை நனவாக்க அயராது பாடுபட்டவர் புரூஸ் லீ. உடல்தான் தனது மூலதனம் என்று நம்பிய அவர் அதை ஒரு கோவிலாகவே வழிபட்டார். தினசரி ஓடுவது,எடை தூக்குவது என்று தனது உடலை வலுப்படுத்திக்கொண்டதோடு வைட்டமின்கள், ஜின்செங், ராயல் ஜெல்லி போன்றவற்றையும் உட்கொண்டு உடலை திடமாக வைத்துக்கொண்டார்.
அகால மரணம் அவரது ஆயுளை குறைக்காமல் இருந்திருந்தால் சினிமாவிலும், தற்காப்புக்கலையிலும் இன்னும் மிகப்பெரிய வெற்றிகளை குவித்திருப்பார் புரூஸ் லீ. 33 ஆண்டுகளே வாழ்ந்தாலும் ஓர் அர்த்தமுள்ள வாழ்கையை வாழ்ந்திருக்கிறார். குண்டர் கும்பலில் இருந்தாலும், ஒழுங்காக படிக்காவிட்டாலும் தான் தேர்ந்தெடுத்த துறையில் அவர் செலுத்திய முழு கவனமும் காட்டிய ஆர்வமும் கொட்டிய உழைப்பும் சிந்திய வியர்வையும்தான் புரூஸ் லீக்கு அந்த இளம் வயதிலேயே பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது.

Subscribe to:
Posts (Atom)
Damn sathees. Powered by Blogger.