3-இடியட்ஸ் என்ற இந்தி படத்தை உரிமையை
வாங்கி ஷங்கர் தன்னுடைய பாணியில் இயக்கி
டித்திருக்கும் படம்தான் “நண்பன்“.
ராகவாலாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, சத்யன் என
மிகப்பபெரிய நடிகர் பட்டாளத்துடன்
தயாராகியிருக்கிறது இத்திரைப்படம்.
காதாயாநாயகியாக இலியானா நடித்திருக்கிறார்.
இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது
வெளியிடப்பட்டுள்ளது. மேலும் நாளை 23-ந் தேதி
நண்பன் படத்தில் பாடல்கள்
வெளியிடப்படயிருக்கிறது.
இந்தபடத்தின் பாடல்களை பிரமாண்டமாக வெளியிட ஏற்பாடுகள் நடந்துக் கொண்டு இருக்கிறது. இந்த
பாடல் வெளியிட்டுவிழாவுக்கு ரசிகர்களை விஜய் அழைத்திருக்கிறார்.
பொங்கலுக்கு வெளிவர இருக்கும் இந்த நண்பன் படத்தின் சுவாரஸ்யங்கள் இங்கே.
முதலில் இந்த படத்துக்கு வைக்கவிருந்த பெயர் “மூவர்”இதை தவிர்த்து கடைசியாக “நண்பன்” என்று
பெயர் சூ்ட்டினார்.
நண்பன் என்ற படத்தலைப்பு ரஜினியின் “பாண்டியன்” படத்துக்கு வைத்து பிறகு மாற்றிவிட்டார்கள். இது
கூடுதல் தகவல்.
நண்பன் படத்தில் ஸ்ரீகாந்துக்கு கல்லூரி மாணவர் வேடம், அதற்காக கல்லூரி மாணவர் அளவுக்கு
உடலை குறைக்க ஷங்கர் விரும்பியிருக்கிறார்.
அதை பூர்த்திசெய்ய ஒரு வேளை உணவை தவிர்த்து ஒரு கல்லூரி மாணவரின் உடல்வாகை
பெற்றுவிட்டார் ஸ்ரீகாந்த்.
நடிப்பில் நான் தனியாக தெரிய வேண்டும் என்பது ஸ்ரீகாந்தின் ஆசையாம்.
இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா இந்தப் படத்தில் மிக முக்கியமான ஒரு பாத்திரத்தில்
நடித்துக்கொடுத்திருக்கிறாராம்.
சன் குழுமம் பல்வேறு வழக்குகளை சந்தித்து தற்போது அதிலிருந்து கொஞ்சம் வெளியில்
வந்திருக்கிறது. சக்சேனா சிறைவாசத்திற்கு பிறகு புதிய சி.இ.ஓ-வாக செம்பியன்என்பவர்
நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பிரபல தயாரிப்பாளர் கோவை செழியனின் மகன்.
இதுவரையில் விஜய்யிடம் சுனக்கம் காட்டிவந்த சன் மூவீஸ்தற்போது இழந்த இடத்தை மீண்டும் பிடிக்க
திட்டமிட்டுள்ளதால். விஜயின் படம் அதற்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறது.
ஷங்கர் இயக்கிய எந்திரன் சன் பிக்சர் படம் என்பதால் ஷங்கர் இதற்கு ஒத்துழைப்பு கொடுப்பார் என்று
கருதப்படுகிறது. பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

தமிழிலும் தெலுங்கிலும், நடிப்பு, இயக்கம், என
பிஸியாக இருக்கும் லாரன்ஸிடம் ஷங்கர் நண்பன்
படித்தில் நடிக்க கேட்டபோது மறுப்பேதும்
சொல்லாமல் ஒத்துக்கொண்டு
நடித்துகொடுத்துள்ளார். லாரன்ஸ்.
படம் நல்லபடியாக முடிந்ததை அடுத்து, அதில்
பணிப்புரிந்த250க்கும் மேற்பட்ட
படக்குழுவினர்களுக்கு வடபழனியில் உள்ள
பெரிய நட்சத்திர ஹோட்டலில் பெரிய
விருந்துகொடுத்து அசத்தியிருக்கிறார் விஜய்.
தீபாவளிக்கு வெளியிடவேண்டும் என்று ஆரம்பித்த நண்பன் தள்ளிப்போய் பொங்கலுக்கு வருவது
உறுதியாகிவிட்டது.
ஷங்கர் அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.பொங்களுக்கு விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில்
மிதப்பார்கள்.
எந்திரன் என்ற மிகபிரமாண்டத்திற்கு பிறகு ஷங்கரும், காவலன், வேலாயுதம் வெற்றிக்குபிறகு
விஜய்யும், இணைந்துகொடுக்கும் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
இதில் நடித்திருக்கும் அனைவரையும் ஷங்கர் முதல் முறையாக இயக்குகிறார். ஆகையால்
அனைவரும் ஆர்வமுடன் நடித்து கொடுத்திருக்கிறார்களாலாம்.
எதிர்காலத்தில் நண்பன் படம் இருவருக்கும் ஒரு எழுச்சியாக இருக்குமா?… அல்லது வீழ்ச்சியாக
இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருதரப்பிலும் வலுத்துள்ளது.
நண்பன் படத்தின் வெற்றி எவ்வாறு உள்ளது என்பதை பார்க்க பொங்கல் வரை காத்திருப்போம்..