Saturday, December 3, 2011

மரமாக மாற்றமடைய தயாராகி வரும் பாரிஸின் ஈபிள் கோபுரம்



பாரிஸ் நகரின் 327 மீற்றர் உயரமுள்ள ஈபிள் கோபுரத்தினை 72 மில்லியன் யூரோக்களைக் செலவழித்து மரங்களை வளர்த்து கோபுரத்தை மரமாக மாற்றப்போவதாகத் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இத்திட்டமானது எதிர்வரும் 2012 ஆம் ஆண்டு யூன் மாதத்தில் ஆரம்பிக்கப்படும். இதன்போது ஆரம்பத்தில் 378 தொன் நிறையுள்ள 600,000 வகை மரங்கள் நடப்படுமென்று கூறப்படுகின்றது.
மேலும் இம்மரக்கன்று பின்பு 4 வருடங்களில் வளர்த்தெடுக்கலாம் என்றும், இதனை 2 வருடமாக ஆராயப்பட்டு வந்ததாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் அதிகமான நிறையை இக்கோபுரம் தாங்குமா என்பதையும் வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
இதனால் எதிர்வரும் 2012ஆம் ஆண்டு யூன் மாதம் வரை தாவரங்கள் வேறோரிடத்தில் வளர்க்கப்பட்டு பின்பு எதிர்வரும் 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கோபுரத்தில் நாட்டப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. sathees

No comments:

Post a Comment

Damn sathees. Powered by Blogger.

About Me