Sunday, December 11, 2011

உலக சாதனை : சேவாக் அதிரடி இரட்டை சதம்



இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 4வது ஒருநாள் போட்டி இந்தியாவின் இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் இன்று(8.12.2011) பகல்/இரவு ஆட்டமாக நடந்து வருகிறது.

இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித்தலைவர் சேவாக் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். இந்திய அணியின் சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக சேவாக்-காம்பீர் ஜோடி களமிறங்கியது.

ஆரம்ப முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சேவாக்-காம்பீர் ஜோடி, மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது.


முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 176 ஓட்டங்கள் சேர்த்தது. இதனையடுத்து காம்பீர் 67 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஓட்டம் எடுக்க முற்படுகையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ரெய்னா சேவாக்குடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக ஆடிய சேவாக் 69 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.

மேலும் ஒருநாள் போட்டியில் தனிநபர் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையான 219 ஓட்டங்களை கடந்து இன்று சேவாக் உலக சாதனை படைத்தார். (மாலை 5.10 மணி இந்திய நேரப்படி)

இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் ஏற்கனவே 200 ஓட்டங்களை எடுத்த சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சச்சின் டெண்டுல்கரின் அதே சாதனையை சேவாக் முறியடித்திருப்பது இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இன்று போட்டி நடப்பதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த சேவாக், தனது அதிரடி ஆட்டத்தை காட்ட நேரம் வந்துவிட்டது என்று கூறினார். அவர் கூறியதற்கிணங்க 219 ஓட்டங்களை எடுத்த உலக சாதனை நிகழ்த்தியமை இந்திய துடுப்பாட்ட ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Damn sathees

No comments:

Post a Comment

Damn sathees. Powered by Blogger.

About Me