
அமெரிக்காவில் சோனி மியூசிக் குழுமத்தை சேர்ந்த எரிக் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் இதை வெளியிட்டுள்ளது. இதில் மைக்கேல் ஜாக்சனின் 20 பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளன.பிரபல பாடகர் ஜஸ்டின் டிம்பர்லே, பாடகி ரிஹானா ஆகியோரும் இதில் பாடியுள்ளனர். உலகின் பல நாடுகளிலும் கடந்த 18ம் திகதி தொடங்கி நேற்று வரை இந்த ஆல்பம் வெளியாகியுள்ளது.ஜாக்சன் இறந்த பிறகு வரும் 8வது ரீமிக்ஸ் ஆல்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது 60 பாடல்களை ரீமிக்ஸ் செய்து நேரடி இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது
No comments:
Post a Comment